Tuesday, January 24, 2006

எனது சாய்ஸ் 'தோனி'.. உங்கள் சாய்ஸ் ??

இந்தியா முதல் இன்னிங்ஸ் - 603 ஆல் அவுட். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 588 ஆல் அவுட். இரண்டாம் இன்னிங்ஸ் 152/1.

இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 603 ரன்கள் குவித்தது. தோனி அபாரமாக ஆடி 144 ரன்களும்,பதான் 90 ரன்களும் குவித்தனர். பந்து வீச்சாளர்கள் அனைவரும் ரன்கள் குவித்து, இந்தியா பாகிஸ்தானின் ஸ்கோரை தாண்ட உதவியது சிறப்பம்சம்.பந்துவீச்சில் பிரகாசிக்காத பதான் பேட்டிங்கில் அக்குறையை ஈடுகட்டினார். பாகிஸ்தானை விட 15 ரன்கள் அதிகமாக எடுத்து, இந்தியா உளவியல் ரீதியான வெற்றியை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் கனேரியா 3 விக்கெட்டுகளும், ரசாக் மற்றும் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்துள்ளது. 300 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்து, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க பாகிஸ்தான் விரும்பலாம். டிராவுக்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆட்ட நாயகன் விருது சிறப்பாக ஆடி 156 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த அப்ரிடிக்கோ அல்லது நெருக்கடியான சூழ்நிலையில் அதிரடியாக ஆடி 144 ரன்கள் குவித்து இந்தியா பாலோ-ஆனை தவிர்க்க காரணமான தோனிக்கோ கிடைக்கலாம். எனது சாய்ஸ் 'தோனி'.. உங்கள் சாய்ஸ் ??

2 Comments:

Blogger dvetrivel said...

பிட்ச்(பிச்சு) போட்ட புண்ணியவானுக்கு குடுத்தா பொருத்தமா இருக்கும். மேட்சுல ஆடாம இருக்கும்போதே அப்பப்ப லைவ பவிலியனில் அமர்ந்திருப்பதாக காட்டப்படும் கங்குலி!

6:31 AM  
Blogger பரஞ்சோதி said...

தோனி, தோனியைத் தவிர யாரும் இல்லை.

என்னங்க இப்படி செத்து போன பிட்சை வைத்து விளையாடுறாங்க.

அதில் சச்சின் வேறு அவுட் இல்லையாம். பாவம் சச்சின் சர்ச்சனையான முறையில் அவுட் அதிகம் ஆனவர் என்ற சாதனை செய்திருக்கிறார்.

6:37 AM  

Post a Comment

<< Home