Sunday, January 15, 2006

VB சீரீஸ் போட்டி- தென் ஆப்பிரிக்கா வெற்றி

நேற்று பிரிஸ்பேன் காபா(Gabba) மைதானத்தில் நடைபெற்ற ஒரு விறுவிறுப்பான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸி அணியை வென்றது


Photo: Courtesy: Cricinfo.com

பிரிஸ்பேன் நகரின் காபா (Gabba) மைதானம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிறந்த மைதானங்களில் ஒன்று. நவம்பரில் துவங்கும் ஆஸி கிரிக்கெட் சீசனில் முதலில் பெரும்பாலும் இங்குதான் டெஸ்ட் அல்லது ஒரு நாள் போட்டி துவங்கும். பிட்ச் நல்ல வகையில், வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் நல்லபடியாக மட்டையை நோக்கி வரும் அளவிற்கு இருப்பதால் பந்துவீச்சாளர்கள், மட்டையாளர்கள் இருவர்களுக்கும் சமமாக இருப்பதால், இங்கு நடக்கும் பெரும்பாலான போட்டிகள் டிரா ஆக சான்ஸ் குறைவு.


நேற்று நடந்த VB சீரீஸின் இரண்டாவது ஆட்டத்தில் முதலில் ஆஸி அணி ஆடத்துவங்கியது. Pollockகின் அபார பந்துவீச்சில் ஆரம்ப ஆட்டக்காரர்களை கிடுகிடுவென ஆஸி அணி இழக்க, 6 விக்கெட்டுக்கு 100 என இருந்த அணியின் ஸ்கோரை மைக் ஹூஸ்ஸியும், ப்ரெட் லீயும் அபாரமாக ஆடி 228 வரை கொண்டு சேர்த்தனர்.

மைக் ஹூஸ்ஸி ஒரு நல்ல கண்டுபிடிப்பு. கொஞ்சம் வயதாகிவிட்டாலும், இன்னும் பல போட்டிகளில் ஆஸி அணிக்கு விளையாடுவார் என்றே தோன்றுகிறது. பிரெட் லீயும் சிறப்பாக ஆடினார்.

பதிலுக்கு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்கு 229 என்றாலும் ஆஸி அணியின் அபார ·பீல்டிங் மற்றும் நல்ல பந்துவீச்சில் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி முன்னேறினர். சில விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டிப்பெனார் மற்றும் மார்க் பவுச்சர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதையில் எடுத்துச் சென்றனர். கடைசியாக வந்திறங்கிய ஜஸ்டின் கெம்பும் பவுச்சருக்கு துணைகொடுத்து வெற்றியை நெருங்கிவிட்ட நிலையில் மழை..!

1992 உலகப்கோப்பையிலேயே தென்னாப்பிரிக்க அணிக்கு மழையால் இதுமாதிரி ஒரு ஜெயிக்க வேண்டிய போட்டியை தோற்க நேர்ந்தது. இந்த முறை டெஸ்ட் தொடரிலும் ஆஸியிடம் தோற்ற நிலையில், அட்லீஸ்ட் ஒருநாள் போட்டியிலாவது ஜெயிக்க வந்து மழை மற்றும் Duckworth Lewis எண்ணிக்கையால் தோற்க நேர்ந்தால் அதைவிட மோசமான நிலை என்னவென்று சொல்வது ?

ஆனால் கடைசியில் வருண பகவான் கொஞ்சம் கருணை காட்டியதால் ஆட்டம் முடிய 10 நிமிடம் இருக்கும் போது மீண்டும் துவங்க 5 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்கா ஆஸி அணியை வென்றது. மைதானத்தில் இருந்த பல பார்வையாளர்கள், ஆஸி அணி ஆதரவாளர்கள், கொஞ்சம் பதற்றத்துடன் இருக்கும் அளவிற்கு போட்டி கடைசி 10 ஓவர்களில் மிகவும் பரபரப்பாக இருந்தது. மக்ராத்தின் ஓவரில் (47ஆவது) மார்க் பவுச்சர் அடித்த ஸ்டிரேய்ட் டிரைவ் Flat சிக்ஸர் ஓர் மறக்க முடியாத ஷாட். மக்ராத்தை இது மாதிரி, அதுவும் உயரே தூக்கி அடிக்காமல் Flatஆக ஸ்டிரெய்ட் டிரைவில் சிக்ஸர் அடித்தது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.

விளையாட ஆரம்பத்தில் மார்க் பவுச்சர் ஒரு சென்சேஷன் என கருதப்பட்டாலும் சமீப காலமாக அவரின் பேட்டிங்கில் அவ்வளவாக அணிக்கு வலு சேர்க்கவில்லை. அந்த குறையை நேற்றைய போட்டியில் தீர்த்துவிட்டார். (ஆனால் Man of the Match - Pollock தான்)


ஸ்கோர்: http://usa.cricinfo.com/ci/content/match/226375.html

படங்கள்: http://content-usa.cricinfo.com/vbseries/content/gallery/233083.html



- அலெக்ஸ் பாண்டியன்
16-ஜனவரி-2006

பி.கு: லாகூரில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி அநேகமாக
டிராவில் முடிவடையும். ஆப்ரிடியும், கம்ரான் அக்மாலும் பின்னர் விரேந்திர சேவாகும்
அடி தூள்.

2 Comments:

Blogger பழூர் கார்த்தி said...

ஆஸ்திரேலியா மெல்ல மெல்ல தனது தனித்துவத்தை இழந்து வருகிறது...
மெக்ராத் போய்விட்டால் ஆஸ்திரேலியாவை யார் வேண்டுமானாலும் அடிக்க வாய்ப்புகள் அதிகம் !

*****

டெண்டுல்கர் 1998 ஏப்ரல் - சார்ஜா சீரிஸில் காஸ்ப்ரோவிஸை ஸ்ட்ரெயிட் சிக்ஸ் அடிப்பார், ஞாபகமிருக்கிறதா ?? அதுதான் நான் பார்த்ததிலே சிறந்த சிக்ஸ் :-)

9:53 PM  
Anonymous Anonymous said...

அய்யோ... அய்யோ...
பாக்., டெஸ்ட வுட்டுப்புட்டு வி.பி., டெஸ்டாம். தேவையா இது... அப்படியானால் வி.பி., டெஸ்டை இரண்டாவதாகக்கூட கவர் செய்து கொள்ளலாமே!

6:12 AM  

Post a Comment

<< Home