Wednesday, December 07, 2005

நாளை மறுநாள் தொடங்கும் மூன்று ஆட்டங்கள் - முன்னோட்டம்

நாளை மறுநாள் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் ஆட்டம். பாகிஸ்தான் - இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி.

முதலாவதில் ஆஸ்திரேலியா ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். இரண்டாவதில் பாகிஸ்தான்.

நாளை மறுநாள்தான் இந்தியா-இலங்கை இரண்டாவது டெஸ்ட் தில்லியில் தொடங்குகிறது. சென்னையில் நடந்த ஆட்டத்தை மறந்துவிட்டுதான் இந்தியா விளையாடவேண்டும்.

அகர்கர் அணியில் இருக்கவேண்டுமா என்பது கேள்வி. ஆனால் இப்பொழுதைய டீம் நிர்வாகத்துக்கு அவர் மீது அப்படி என்ன நம்பிக்கையோ தெரியவில்லை. ஒருநாள் போட்டிகள் வேறு, டெஸ்ட் போட்டிகள் வேறு. ஜாகீர் கான் அணிக்குள் வந்தால் நன்றாக இருக்கும். அதேபோல பாலாஜிக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்காகக் கூட இந்த வருடம் இதுவரையில் ஆடவில்லை.

பதான், கும்ப்ளே இருவரும் விக்கெட் எடுக்கக்கூடியவர்கள். ஹர்பஜன் சிங் சென்னையில் விக்கெட் எடுக்காவிட்டாலும் நம்பகமானவர். நிறைய விக்கெட்டுகளை எடுக்கக்கூடியவர். ஆனால் அகர்கர் மீது அப்படியான நம்பிக்கை எனக்கு இல்லை.

இந்தியாவின் பேட்டிங்கிலும் சில பிரச்னைகள். டெண்டுல்கர், லக்ஷ்மண், கங்குலி - மூவருமே பல்வேறு காரணங்களால் நம்பிக்கை தரும் விதமாக விளையாடவில்லை. இதில் லக்ஷ்மண், கங்குலி இருவருமே ஒருநாள் போட்டிகளில் விளையாடாதவர்கள். அதனால் அவர்களது ஃபார்ம் பற்றி முழுமையாகச் சொல்லமுடியாது.

இவர்கள் மூவரில் யாராவது இருவராவது நல்ல ஃபார்முக்கு வருவது இந்தியாவுக்கு அவசியமாகிறது.

4 Comments:

Blogger பழூர் கார்த்தி said...

//அகர்கர் அணியில் இருக்கவேண்டுமா என்பது கேள்வி//

சரியா சொன்னீங்க பத்ரி, ஜகீர்கானுக்கு என்ன ஆயிற்று, டெஸ்ட் அணிக்கு கட்டாயம் அவர் தேவை...

----

எனக்கென்னவோ டெண்டுல்கர் இந்த தொடரில் 35-வது சதம் எடுக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது.. சென்னையில் அவர் ஆடிய ஆட்டம் பார்த்து கண்ணில் தண்ணீர் வந்து விட்டது :-(

9:02 PM  
Blogger பரஞ்சோதி said...

சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியை வைத்து நம்ம அணியை எடை போடக்கூடாது.

எப்படியும் டிரா என்ற போட்டியில் தேவையில்லாமல் அடித்து ஆட வேண்டாம், இலங்கையரின் பந்து வீச்சை படிக்கலாம் என்று திட்டமிட்டதாலும், மைதானம் காயாததாலும் பந்து தன் இஷ்டம் போல் உருண்டும், எழும்பியும் போனதாலும் நம்மவர்கள் ஆட முடியவில்லை. அதில் தேவையற்ற ரன் அவுட்கள் வேறு.

அதே நேரம் இலங்கையைப் பொறுத்தவரை இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்க வேண்டும், தங்களுக்குள் நம்பிக்கையை வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடினார்கள்.

இலங்கையருக்கு எல்லாமே கை கொடுத்தது, அவ்வளவு தான்.

நம்பிக்கை வையுங்க, நம்மவர்கள் வென்று காட்டுவாங்க.

9:29 PM  
Blogger பூனைக்குட்டி said...

பத்ரி இந்தியா இலங்கை மாட்ச் நாளன்னிக்கி தானே. நீங்க நாளைக்குன்னு போட்டுறுக்கீங்க.

10:40 PM  
Blogger Badri Seshadri said...

மோகன்: சாரி... எல்லா ஆட்டங்களுமே நாளை மறுநாள்தான் - சனிக்கிழமைதான். நான்தான் தேதியைச் சரியாகக் கவனிக்கவில்லை!!

11:44 PM  

Post a Comment

<< Home