Wednesday, November 30, 2005

சென்னை டெஸ்ட் போட்டியைத் தடை செய்ய வழக்கு

எதற்கெல்லாம் நீதிமன்றத்துக்குப் போவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையில் டிசம்பர் 2-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாராம்.

இது மழைக்காலம் என்பதாலும், ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி ரத்தானதாலும், அதில் டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தராததாலும் கோபமுற்ற சுரேஷ் பாபு அக்டோபர்-டிசம்பர் நேரங்களில் சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதுவும் நடைபெறக் கூடாது என்று இந்த வழக்கைப் போட்டுள்ளார். மேற்கொண்டு டிக்கெட்டுகளை எதையும் விற்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும்போலத் தெரிகிறது.

தகவல்: சன் நியூஸ்

2 Comments:

Blogger பரி (Pari) said...

நீதிமன்றத்துக்குப் போவது வேண்டுமானால விவஸ்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தெற்கே கிரிக்கெட் நடத்த திட்டமிட்டது விவஸ்தை இல்லாதது இல்லையா? :)

9:39 AM  
Blogger Badri Seshadri said...

செய்திருக்கக் கூடாதுதான். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருவிதமான ரொடேஷன் முறையைப் பின்பற்றுகிறது. அதை முதலில் மாற்றியாக வேண்டும்.

இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதைப்பற்றி விவரமாகப் பின்னர் எழுதுகிறேன்.

5:41 PM  

Post a Comment

<< Home