Tuesday, November 29, 2005

கிரீம் ஸ்மித் விரல்

மும்பை ஒருநாள் போட்டியின்போது ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்தின் கைவிரலில் அடிபட்டது.

ஸ்லிப் வழியாக சில கேட்ச்கள் சென்றபோது ஸ்லிப்பில் யாருமே நிற்கவில்லை. பின் கிட்டத்தட்ட இந்தியா வெற்றிக்கு அருகே வந்தபோது ஸ்மித் மூன்றாம் ஸ்லிப் இருக்கும் இடத்தில் நின்றார். அப்பொழுது திராவிட் கட் செய்த பந்து முதல் ஸ்லிப் வழியாக மேலாகச் சென்றது. அதைப் பிடிக்கப் பாய்ந்த ஸ்மித் தனது இடதுகை மோதிரவிரலை மட்டும்தான் பந்தின் வழியில் கொண்டுவர முடிந்தது. அந்த ஓவர் முடிந்ததும் மிகுந்த வலியோடு மைதானத்தை விட்டு வெளியே சென்றார் ஸ்மித்.

இப்பொழுது அவரால் ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் உள்ளதாம். அப்படியானால் இது தென்னாப்பிரிக்காவுக்குப் பெருத்த பின்னடைவு.

2 Comments:

Blogger டிபிஆர்.ஜோசப் said...

Dear Badri,

Could you please write a Post on the new rules: Power Play and Super Sub? in the ODIs and how it would help to better a team's chance of winning.

10:18 PM  
Blogger Badri Seshadri said...

http://thoughtsintamil.blogspot.com/2005/09/blog-post.html

மேற்கண்ட சுட்டியில் இந்த விதிகளைப் பற்றி நீண்ட விளக்கம் அளித்துள்ளேன்.

இப்பொழுது என் கருத்துகள் சற்றே மாறியுள்ளன. (ஆனால், அடிப்படையில் பெரிய மாற்றம் இல்லை.) அதைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்.

1:47 AM  

Post a Comment

<< Home