இந்தியா 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இன்று காலை 7.3 ஓவர்கள்தான் தேவைப்பட்டது, இலங்கையை ஆல் அவுட் ஆக்க.
காலையின் இரண்டாவது ஓவரிலேயே மஹரூஃப் கும்ப்ளே பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 235/7. அதற்கடுத்த ஹர்பஜன் ஓவரின் முதல் பந்திலேயே முபாரக், ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 235/8.
ஹர்பஜன் தனது அடுத்த ஓவரில் முரளிதரனை பவுல்ட் ஆக்கினார். இலங்கை 245/9. கடைசி விக்கெட் கும்ப்ளேக்குக் கிடைத்தது. பண்டாரா ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க, சேவாக் பிடித்தார். இலங்கை 249 ஆல் அவுட். இதுதான் இந்தியாவுக்கு ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
கும்ப்ளே 34.3-9-89-5 எடுத்தார். ஆனால் இந்த டெஸ்டில் ஹர்பஜனுக்குத்தான் 10-141 என்று மிக அதிக விக்கெட்டுகள் கிடைத்தது! ஹர்பஜன் சிங்கே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இந்தப் போட்டித்தொடரில் கும்ப்ளே 374 ரன்கள் கொடுத்து 20 விக்கெட்டுகள் பெற்றுள்ளார். ஹர்பஜன் 312 ரன்கள் கொடுத்து 14 விக்கெட்டுகள் பெற்றுள்ளார். கும்ப்ளேதான் போட்டித் தொடரின் நாயகன்.

2 Comments:
Fantastic.
ஆட்டத்தைப் போன்றே உங்களுடைய Short and Sweet பதிவுகளும் விறுவிறுப்பா இருக்கு பத்ரி.
வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி பத்ரி.. இந்த தொடர் முழுவதுமே உடனுக்குடன் விறுவிறுப்பாக தகவல்களை, விமர்சனங்களை முன்வைத்தீர்கள்.. மிகுந்த வேலைப்பளு காரணமாக உங்களுக்கு தோள் கொடுக்க இயலாதது, எனக்கு வருத்தமே..
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கும், உங்களுக்கும், சக கூட்டுப்பதிவர்களுக்கும் !!!
Post a Comment
<< Home