Wednesday, December 07, 2005

சச்சின் - டெல்லி - 35 ?

34 சதங்களை அடித்து, கவாஸ்கருடன் அதிக டெஸ்ட் சதங்களுக்கான உலக சாதனையை சமன் செய்துள்ள சச்சினுக்கு தேவை இன்னும் ஓர் சதம். 35வது சதத்தை நடந்து கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடித்து சாதனை புரிய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் சச்சினின் தற்போதைய ஃபார்ம் கவலை அளிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆடியதோடு சரி. அதற்கு பிறகு ஆடிய 8 ஒருநாள் ஆட்டங்களிலும் (இலங்கைக்கு எதிராக - 4, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக - 4) சரியாக ஆடவில்லை. அவரது வழக்கமான ஆட்டமுறையை பார்க்க இயலவில்லை.

இலங்கைக்கு எதிராக, சென்னையில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடியதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வந்து விட்டது. அவ்வளவு மோசமாக ஆடினார். பிட்ச் சுமார்தான். பந்து எழும்ப வில்லை. வாஸ் மற்றும் முரளீதரன் நன்றாக பந்து வீசினார்கள். இருந்தாலும் திறமையான ஆட்டக்காரரான சச்சின் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்ட விதம் கேள்விக்குறியானதே.

22.3 ஓவர்கள் விளையாடி 22 ரன்கள் எடுத்தார். இதுவே கூட ஒரு சாதனையாக இருக்கலாம். கொஞ்சம் அடித்து ஆடியிருந்தால் நெருக்கடி குறைந்திருக்கக் கூடும். சச்சினின் தடுமாற்றத்தினால் இலங்கை வீரர்கள் உற்சாகம் பெற்று நன்றாக பந்து வீசினர். பிற இந்திய வீரர்களுக்கும் நெருக்கடி அதிகரித்தது. வாஸ் 10 ஓவர்கள் தொடர்ந்து ரன் எதுவும் கொடுக்காமல் பந்து வீசினார். நடுவில் சச்சின் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பினை விக்கெட் கீப்பர் சங்ககரா நழுவ விட்டார். ஒருவழியாக சச்சின் அவுட்டான போது, வருத்தத்தை விட கோபம்தான் வந்தது.

இருந்தாலும் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் இன்னமும் சச்சினே. சச்சின் களத்தில் இருப்பது இந்திய வீரர்களுக்கு ஊக்கத்தையும், எதிரணி வீரர்களுக்கு கலக்கத்தையும் தருவது உண்மையே. கடந்து 16 வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் சச்சின் சீக்கிரம் ஃபார்முக்கு திரும்புவதையும், சாதனை படைப்பதையும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள்.

அடுத்த டெஸ்ட் டெல்லியில் நடக்கிறது, பார்ப்போம் டெல்லி கை கொடுக்குமா என்று? இந்தியா இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்றால், ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறலாம்!

3 Comments:

Blogger பரஞ்சோதி said...

கவலை வேண்டாம்.

35 என்ன 50 சதங்கள் அவர் அடிப்பார்.

சச்சின், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் சேர்ந்து 100 சதங்கள் அடித்து யாருமே நெருங்க முடியாத சாதனையை செய்வார்.

2:05 AM  
Anonymous Anonymous said...

Manier people are deceived in Delhi, including Mr. Natwar Singh, than who meet their expectations. This is the history of Delhi.
Will Tendulkar be a Record(History) Breaker????? Lets wait and see.

3:05 AM  
Blogger பழூர் கார்த்தி said...

பரஞ்சோதி,
ஆசை, தோசை, அப்பளம், வடை...
100 சதங்கள் கஷ்டம்ங்க..80 வரலாம்னு நினைக்கிறேன்..என்றாலும் 100 சதங்கள் எடுப்பதற்கு சச்சினை வாழ்த்துவோம்...

6:08 AM  

Post a Comment

<< Home