Wednesday, November 30, 2005

சென்னை மழை அப்டேட் + முரளி

சென்னையை நோக்கி வரும் புயல் 'புலி வருது' போல பயமுறுத்துகிறது. இன்று (வியாழன்) இரவு கரையைக் கடக்கும் (அல்லது 'கடக்காது') என்கிறார்கள் இப்பொழுது.

இதுவரையில் - வியாழன் காலை - சென்னையில் மழை இல்லை. ஒருவேளை இன்று டிக்கெட் விற்கப்படலாம்.

முரளிக்கு தமிழ் பேசத்தெரியாது என்று யாரோ ஒரு வலைப்பதிவர் சொன்னதாக ஞாபகம். நேற்று தொலைக்காட்சியில் காண்பித்த ஒரு பிட்டில் சகிக்கக்கூடிய அளவுக்கு தமிழில் பேசினார். "எல்லா மேட்சிலும் ஜெயிக்க வேணும், அதுக்கு என்னால முடிஞ்சதைச் செய்வேன்" - அல்லது கிட்டத்தட்ட இந்த மாதிரி தொனிக்கக்கூடிய ஏதோ வார்த்தைகளைச் சொன்னார்.

-*-

கடைசியாக சென்னையில் நடந்த டெஸ்ட் இந்தியா - ஆஸ்திரேலியா. நான்கு நாள்கள் நடந்த கடுமையான போட்டிக்குப் பிறகு ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. மழை அதை வாரிக்கொண்டு போனது. சத்தியமாக மழை இருக்காது என்று தெனாவெட்டாகச் சொன்னேன். "இது சென்னை" என்றேன். ஆனால் அடுத்த நாள் ஒரு பந்தைக் கூட வீச முடியவில்லை.

இந்த முறையோ மழை இல்லாமல் இருந்தால் அதிசயம் என்ற நிலை. ஆனால் பாருங்கள்... ஆட்டம் நடக்கும், ரிசல்ட் கூட இருக்கும் என்று பட்சி சொல்கிறது.

2 Comments:

Anonymous Anonymous said...

As per the latest update,
the intensity got weakened and there is no rain for atleast next 3 days.
--
Jagan

9:26 PM  
Blogger Narain Rajagopalan said...

//இந்த முறையோ மழை இல்லாமல் இருந்தால் அதிசயம் என்ற நிலை. ஆனால் பாருங்கள்... ஆட்டம் நடக்கும், ரிசல்ட் கூட இருக்கும் என்று பட்சி சொல்கிறது.//

நடக்கட்டும். இல்லையென்றால், உங்களின் பட்சி சூப் வைக்க இரையாகிவிடும் ;)))

9:58 PM  

Post a Comment

<< Home