Thursday, December 01, 2005

கங்குலிக்கு ஒரு "சுண்டு"

சென்னையில் கங்குலி ஆடுவாரா?மாட்டாரா? என்று புதிதாக ஒரு விவாதம் எழுந்துள்ளது. யுவராஜ் சிறப்பாக ஆடுவதால் அவரை அணியில் சேர்ப்பார்கள் என்றும் அதன் காரணமாக கங்குலி அல்லது காம்பீர் நீக்கப்படுவார்கள் என்றும் ஒரு யூகம் உலவுகிறது.காம்பீர் நீக்கப்படுவது முட்டாள்தனம். டெஸ்ட் போட்டிகளில் முறையான துவக்க ஆட்டக்காரர்களை அனுப்புவது மிகவும் இன்றியமையாதது.

நான் கங்குலியை ஒரு ஆல்ரவுண்டராக அணியில் சேர்த்ததை கேலிக் கூத்தாக கருதுபவன்.ஆனாலும் கங்குலியை டெஸ்ட் அணியிலிருந்தே நீக்கி விடலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது மட்டையாட்டம் அதிவேக பந்து வீச்சாளர்கள் அமைந்த அணிகளிடம் தடுமாறியது என்பது 100 சதவீத உன்மை என்றாலும், இலங்கைக்கு எதிராக, குறிப்பாக முரளீதரனுக்கு எதிராக கங்குலியின் பேட்டிங் திறன் உபயோகப்படும் என்பது எனது நம்பிக்கை. இது பொய்யாகப் போகலாம். ஆனாலும் கங்குலிக்கு குறைந்த பட்சமாக ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும். யுவராஜ் இன்னும் முரளியை எதிர்த்து நம்பிக்கையுடன் ஒரு இன்னிங்ஸ் கூட ஆடவில்லை. டெஸ்ட் போட்டியில் முரளியை சமாளித்து ஆடுவது ஒரு முக்கியமான தேவையாக அமையும் பட்சத்தில் கங்குலி அணியில் சேர்க்கப்பட வேண்டும்.

மேலும் அணியில் மூன்று ஸ்பின்னர்களை சேர்க்கும் பட்சத்தில் கங்குலி புதிய பந்தை தேய்க்க பயன்படுவார். 1998 ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் கங்குலி ஸ்ரீநாத்துடன் புதுப்பந்தை பங்குகொண்டு பந்து வீசி ஒரு விக்கெட்டையும் பெற்றார்.

கடைசியாக கங்குலிக்கு ஒரு " சுண்டு". உருப்படியாக விளையாடுகிறாரா பார்க்கலாம்.

2 Comments:

Blogger Badri Seshadri said...

சரியான கருத்து. இந்த டெஸ்டில் கங்குலி விளையாட வேண்டும்; யுவராஜ் இன்னும் கொஞ்ச நாள் உட்கார்ந்திருக்கலாம்.

அத்துடன் இரண்டு ஸ்பின்னர்கள் போதும் என்பதும் என் கருத்து.

கம்பீர், சேவாக், திராவிட், டெண்டுல்கர், லக்ஷ்மண், கங்குலி, தோனி, பதான், அகர்கர், ஹர்பஜன் சிங், கும்ப்ளே.

(அகர்கருக்கு பதில் ஜாகீர் கான் விளையாடியிருக்க வேண்டும்!)

1:17 AM  
Blogger Alex Pandian said...

ஜாகீர் கானை டீமில் எடுக்காததற்கு அவரது 'ஆட்டிடியூட்' தான் காரணம் என கேள்வி. அதாவது ஜான் ரைட்டின் கடைசி ஆறு மாதங்களில் அவருக்கு மிகவும் தொல்லை கொடுத்து (மதிக்காமல்) - ஒரு கட்டத்தில் அவரை கை நீட்டும் அளவு சென்றுள்ளதாக சுனில் காவஸ்கர் கட்டுரையில் படித்த ஞாபகம். சுட்டி கிடைத்தால் எடுத்து இடுகிறேன். மேலும் 10 ஓவர் போட்டாலே கால் சுளுக்கு வந்துவிடும் ஜாகீர்கான், ஆசிஷ் நெரா போன்றவர்கள் இல்லாமல் புது வீச்சாளர்கள் ஸ்ரீஷாந்த், ஆர்.பி.சிங் போன்றோருக்கு வாய்ப்பு கொடுப்பது சரியே. அதுவும் இந்திய சுழல் ஆடுகளங்களில் ஹர்பஜனும், கும்ப்ளேயுமே அதிக ஓவர்கள் வீசப்போகிறார்கள்.

- அலெக்ஸ்

6:44 AM  

Post a Comment

<< Home