Saturday, December 24, 2005

கங்குலி மீண்டும் இந்திய அணியில்

கங்குலி ஷரத் பவாரைச் சந்தித்தார். கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.

பாகிஸ்தான் செல்லும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

காயிஃப் அணியில் இல்லை; முரளி கார்த்திக் அணியில் இல்லை. பார்த்திவ் படேல் மீண்டும் உள்ளே வந்துள்ளார், இரண்டாவது விக்கெட் கீப்பராக. தினேஷ் கார்த்திக் ரஞ்சியில் அவ்வளவாக ஒன்றும் செய்யாததாலும் படேல் நன்றாக விளையாடியிருப்பதாலும் கார்த்திக்குக்கு பதிலாக படேல் வந்திருப்பதாக கிரன் மோரே சொல்கிறார்.

அகர்கர் அணியில் தொடர்கிறார். ஆனால் நல்லவேளையாக ஜாகீர் கானும் ஆர்.பி.சிங்கும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆக அணி-16:

ராகுல் திராவிட் - அணித்தலைவர்
விரேந்தர் சேவாக் - துணைத்தலைவர்
வாசிம் ஜாஃபர் - தொடக்க ஆட்டக்காரர்
கவுதம் கம்பீர் - தொடக்க ஆட்டக்காரர்
சச்சின் டெண்டுல்கர் - மிடில் ஆர்டர்
விவிஎஸ் லக்ஷ்மண் - மிடில் ஆர்டர்
யுவராஜ் சிங் - மிடில் ஆர்டர்
சவுரவ் கங்குலி - மிடில் ஆர்டர்
மஹேந்திர சிங் தோனி - விக்கெட் கீப்பர்
பார்த்திவ் படேல் - விக்கெட் கீப்பர்
இர்ஃபான் பதான் - வேகப்பந்து, ஆல் ரவுண்டர்
அஜித் அகர்கர் - வேகப்பந்து
ஜாகீர் கான் - வேகப்பந்து
ஆர்.பி.சிங் - வேகப்பந்து
அனில் கும்ப்ளே - சுழல்பந்து
ஹர்பஜன் சிங் - சுழல்பந்து

2 Comments:

Blogger Vaa.Manikandan said...

ஏங்க டெண்டுல்கர் எப்போதும் தனக்காகத்தான் விளையாடுவாராமே? அகார்கர் அவர் புண்ணியத்தில்தானே உள்ளே இருக்கிறார்?

எனக்கென்னமோ கவாஸ்கரும், சச்சின் ம் ஒண்ணோனு தோணுது.....குசும்பர்கள்.

4:44 AM  
Blogger பழூர் கார்த்தி said...

எனக்கும் அப்படித்தாங்க தோனுது.. சச்சின் இப்பல்லாம் முன்ன மாதிரி ஆடறதில்லை... கடைசி 20 ஒருநாள் போட்டிகளில், அவரது சராசரி 20க்கும் கீழ்.. டெஸ்ட் போட்டிகளிலும் அதே நிலைமைதான்...

5:06 AM  

Post a Comment

<< Home