Thursday, December 01, 2005

இரு பெயர் - ஒரு ஆள்

முகம்மது யூசுஃப் அடித்தது அவரது முதல் சதம்தான்.
பத்ரி முன்னரே பதிந்திருப்பது போல யூசுஃப் யோஹன்னாதான் சென்னையில் இந்தியாவுக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் சாதனை புரிந்த சயீத் அன்வாரின்
தொடர்ந்த இசுலாமிய கருத்துக்களால் 'வசீகரிக்கப்ப்ட்டு' முகம்மது யூசுஃப் என்ற
பெயரில் இசுலாமியராக மாறினார்.

இப்போது இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்திருந்த போதும் இது அவரது முதல்
சதமாகக் கருதப்படும் என்று 'விஸ்டன்' சொல்லியிருக்கிறது. இரண்டும் இரண்டு
பெயர்கள் என்பதால் இப்படி என்று வினோதமான தனது முடிவை உறுதிப்படுத்தவும்
செய்திருக்கிறது விஸ்டன்.

"பெயர் இரண்டானால் என்ன, ஆள் ஒன்றுதானே ஐயா" என்று கேட்டால் அதையெல்லாம்
விஸ்டன் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ, முகமது
யூசுஃபோ இது குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள் அல்லது சொல்லப் போகிறார்கள் என்பதை இனிதான் தெரிந்து கொள்ள முடியும்.

2 Comments:

Blogger Badri Seshadri said...

ஆசிப்: விஸ்டன் அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறு. பல்வேறு காரணங்களால் ஒருவர் பெயரை மாற்றலாம். இங்கிலாந்தில் பிரபுத்துவம் பெறுபவர்கள் பெயர் மாறும். உ.ம்: Robert Gladstone என்பவர் பெயர் Lord Linlithgo (சும்மா) என்று மாறலாம்.

இந்தியாவில் பலரும் சட்டபூர்வமாக தமது பெயரை மாற்றுகின்றனர். பெயரில் உள்ள ஸ்பெல்லிங்கை எண்கணிதக் காரணங்களுக்காக மாற்றுகின்றனர்.

விஸ்டன் ஆசாமிகளிடம் பேசி என்ன நடந்தது என்று கண்டுபிடிக்கிறேன்.

8:45 AM  
Blogger rajkumar said...

கெப்ளர் வெஸ்ஸல்ஸ் என்ற ஆட்டக்காரர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு ஆடினார். அவருடைய ரிக்கார்ட்டுகளை விஸ்டன் எவ்வாறு நிர்ணயித்தது?

நாடு மாறினால் ஒரு சட்டம், மதம் மாறினால் ஒரு சட்டமா?

8:12 PM  

Post a Comment

<< Home