Wednesday, March 22, 2006

வநதாரை வாழவைத்த திராவிட்

எப்போது சந்திரமுகி அறை திறக்கப்பட்டதோ... சாரி. எப்போது திராவிட் டாஸில் ஜெயித்து இங்கிலாந்தை பேட் செய்யச் சொன்னாரோ, அப்போதே இந்தியாவின் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.இதே போன்ற தவறை அஜார் 1990ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் செய்தார். 1999 உலகக் கோப்பையில் கல்கத்தாவில் செய்தார். இந்திய துணைக் கண்டத்தில் நான்காவது இன்னிங்ஸ் ஆடுவது சுலபமான செயல் அல்ல. இந்திய பந்து வீச்சாளர்களின் மீதான அபரீத்மான நம்பிக்கையில் திராவிட் இம்முடிவை எடுத்திருக்கக் கூடும். ஆனால் நடந்தது முற்றிலும் வேறு.

இந்த டெஸ்டில் கேட்சை எவ்வாறெல்லாம் கோட்டை விடலாம் என பலவிதமாக செய்து காட்டினார்கள் இந்திய வீரர்கள். இத்தகைய மோசமான பீல்டிங்கிற்கு பின்னாலும் இந்தியா வெற்றி பெற்றால்,அது இங்கிலாந்தின் போதாத நேரமாகத்தான் இருக்க முடியும்.

இந்திய அணியின் பேட்டிங் திறமை கணிசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சச்சினுக்கு ஒரு அளவுகோல், லஸ்மணுக்கு ஒரு அளவுகோள் என்றெல்லாம் வைத்து அணியை தேர்வு செய்தால் இவ்வாறான தோல்விகளை பெற் நேரிடும். சேவாக் பலமிழந்தது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு. சேவாக்கை நீக்குங்கள் என்று சுலபமாக கூறலாம்.ஆனால் அவரிடத்தை நிரப்ப, அவரைப் போலவே துரிதமாக ரன்குவிக்கும் அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லை. எனவே சேவாக்கின் ஆட்டம் தரும் பலனை, பிற ஆட்டக்காரர்களால் தர இயலாது.சேவாக் எழும்பும் பந்துகளை ஆடக் கற்றுக் கொண்டால்தான், இச்சிக்கல் தீரும். இல்லாவிடில் சேவாக்கை அணியில் சேர்த்தும் பிரயோசனப்படாது.

இர்பான் பதான் இம் மேட்சில் மிக மோசமாக பந்து வீசினார். அவருக்கு காயம் பட்டிருக்கிறதா என சந்தேகம் வருகிறது. பிட்னஸ் இல்லாத ஆட்டக்காரர்களை போட்டியில் சேர்க்கக் கூடாது. இங்கிலாந்தின் முதல் நாள் ரன் குவிப்பிற்கு பதானின் மோசமான பந்து வீச்சும் காரணம்.

ஜான் ரைட் கோச்சாக இருந்த போது இந்தியா சிறப்பான டெஸ்ட் அணியாக மாறியது. சாப்பலின் உத்திகள் ஒருநாள் போட்டிகளில்தான் பரிமளிக்கிறதே தவிர டெஸ்ட் போட்டிகளில் சொதப்புகிறது. சாப்பல் லஸ்மன் மேல் இன்னும் நம்பிக்கை வைக்க வேண்டும்.லஸ்மண் மற்றும் கங்குலியை முழுவதுமாக நீக்குமளவிற்கு மாற்று ஆட்டக்காரர்களை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை

2 Comments:

Blogger மணியன் said...

ஆட்டத்தின் முதல்நாள் திராவிடுக்குக் கொடுக்கப்பட்ட பாராட்டுவிழாவில் code of conduct மீறப்பட்டதோ ? தூக்க(ல்)கலக்கத்தில் தவறான முடிவு எடுத்திருப்பாரோ ?

4:37 AM  
Blogger பழூர் கார்த்தி said...

//சாப்பல் லஸ்மன் மேல் இன்னும் நம்பிக்கை வைக்க வேண்டும்.லஸ்மண் மற்றும் கங்குலியை முழுவதுமாக நீக்குமளவிற்கு மாற்று ஆட்டக்காரர்களை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை//
சபாஷ்... சரியான வரிகள்..
சேப்பல், கேட்கிறதா இந்த குரல் ???

6:03 AM  

Post a Comment

<< Home