Monday, December 12, 2005

டெல்லி டெஸ்ட் --- வெற்றியை நோக்கி இந்தியா ????

இரண்டாம் டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியா நல்ல வலுவான நிலையில் இருக்கிறது. இந்த மூன்று நாள்களும் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையிலிருப்பதும் பின்னர் மறுநாள் இலங்கையின் பதிலடிக்கு பின்னர் மீண்டும் அந்நிலைக்கு வருவதும் தொடர்கதையாகியிருக்கிறது.
இந்த மூன்று நாள் ஆட்டங்களிலும் காலை முதல் ஒருமணி நேர ஆட்டமும், மதிய தேநீர் இடைவெளிக்கு பிந்தைய ஆட்டமும் நல்ல விறுவிறுப்பான முடிவுகளை கொடுத்தது நிஜம்.

இன்று ஆட்டநேர முடிவில் 237/5 எடுத்து 297 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி நாளை காலை முதல் ஒரு மணி நேரத்தை தாக்கு பிடித்து 400 முதல் 450 வரை முன்னிலை பெற்றால் வெற்றியை நோக்கி பயணிக்கலாம். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமலிருக்கும் கங்குலி இந்த ஆட்டத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி ரன் குவித்து அணியில் தன் இடத்தை உறுதிபடுத்தலாம்.

ஆனால் இந்திய அணியின் வெற்றி இனிமேல் பந்துவிச்சாளர்களின் கையில் குறிப்பாய் கும்ளே பதானிடம் உள்ளது எனலாம். நாளை அணியினர் எவ்வளவு விரைவாய் ரன் சேகரித்தாலும், இல்லை ஆட்டமிழந்தாலும் இலங்கை அணியின் பேட்டிங்கும் பலமாயிருப்பதால் பந்து வீச்சாளர்களின் பணி மிக முக்கியமானதாக இருக்கிறது.

மொத்தத்தில் நாளை ...

இந்தியா 400 முதல் 450 ரன்கள் முன்னிலை.
இலங்கை 3 முதல் 5 விக்கெட்டுகள் இழப்பு

டெல்லி டெஸ்ட் இந்தியா வசமாக அவசியமாகிறது......

(பி.கு): இன்றைய ஆட்டத்தில் மற்றொரு சிறப்பம்சம் 94 போட்டிகளில் 8000 ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய பேட்ஸ்மென்களில் டெஸ்ட் போட்டிகளில் இந்த எண்ணிக்கையை பெற்ற மூன்றாவது வீரராயிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் ....

1 Comments:

Blogger Jayaprakash Sampath said...

நீண்ட நாள் கழித்து இப்போதுதான் டிவியிலே ஆட்டத்தைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. நாளை, ஆட்டம் ஆரம்பித்த ஒரு மணிநேரத்துக்குள் நாலு விக்கட்டுகளாவது விழுந்துவிடும். இந்த இன்னிங்கிஸில், 340 - 350 க்குள் சுருண்டுவிடும். கங்குலியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஒரு காலத்திலே ஸ்பின்னர்களை எல்லாம் கதறடித்தவரா இவர்? ஹ¤ம்ம்ம்...ஹர்பஜன், கும்பிளே மனசு வெச்சால் வெற்றி கிடைக்கும்.

11:06 AM  

Post a Comment

<< Home