Thursday, December 15, 2005

கங்குலி செய்ய வேண்டியது..

கங்குலியை சில நாட்கள் முன்பு திட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட, தற்போது அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதை கண்டித்திருக்கிறார்கள். இந்தியாவில் சாதனையாளர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு மதிக்கும் மனோபாவம் யாரிடமும் காணப்படுவதில்லை. கவாஸ்கரை தவிர பல முக்கிய ஆட்டக்காரர்களை தேர்வாளர்கள் அவமானப்படுத்தியே வெளியேற்றியிருக்கிறார்கள்.

கங்குலியின் கதை முடிந்து விட்டது என்று ஒரு சாராரும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி முயற்சியைத் தொடருவேன் என கங்குலியும் கூறியுள்ளார்கள். எனவே இத் தருணத்தில் கங்குலி என்ன செய்யலாம் என்பதை பற்றி சற்று அலசலாம்.

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை கங்குலி மற்ந்து விடலாம். அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. கங்குலி மீண்டும் பெங்கால் அணிக்கான தலைமைப் பதவியை ஒப்புக் கொள்ள வேண்டும். பெங்கால் அணியை சிறப்பாக வழி நடத்த வேண்டும்.

அடுத்த கவுண்டி சீசனில் நல்ல கவுண்டியாய் சேர்ந்து உருப்படியாக விளையாட முயற்சிக்க வேண்டும். கவுண்டியில் கிடைக்கும் அனுபவம் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள உதவும். அளவு குறைந்த பந்துகளை எதிர் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் அனைவருமா பட்டையை கிளப்பப் போகிறார்கள்? தற்போது அக்தர், நவீத், சாமி ஆகியார் வீசும் பந்து வீச்சைப் பார்த்தால் யுவராஜ், தோனி ஆகியோர் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்று பயமாக இருக்கிறது? யாராவது ஒருவர் சொதப்பும் பட்சத்தில், மீண்டும் கங்குலிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இல்லாவிடில் அடுத்தவருட பிசிசிஐ தேர்தல் மீண்டும் வரத்தான் போகிறது. அதற்குள் டால்மியா ஏதாவது மேஜிக் செய்ய மாட்டாரா என்ன?

மனம் தளர வேண்டாம் தாதா.. மீண்டு (ம்) வர வாழ்த்துக்கள்.

1 Comments:

Blogger Raja said...

கங்குலி நீக்கமும் சரி அதற்கு கொடுத்த விளக்குமும் சரி ஏற்புடையதாக் இல்லை. இந்திய கிரிக்கெட்டின் சாதனை வீரர் மிகவும் அவமாணப்படுத்தபட்டிருக்கிறார். விளையாட்டில் அரசியல் ஆதிக்கத்தையே இது காட்டுகிறது.

ஆனால் கங்குலி மீண்டும் இந்திய அணியின் வீரராக மட்டும் அல்ல கேப்டனகாவும் வரும் நாள் வெகு விரைவில் இல்லை. அதற்கான திறமை அவரிடம் உள்ளது. அணியில் சேரும் போதே அணியில் 12 வது வீரராக வந்து தண்ணி பாட்டல் தூக்க தயாராக வில்லை என்று சொன்னவர்.

ஷகிர்கான், நெக்ரா,பாலஜி போன்றவர்கள் இருக்கும் போது அகார்கருக்கு தொடர்ந்து வாய்ப்பு தருவதும், காம்பீருகு தொடர்ந்து வாய்ப்பு தருவதும் அதிசயாம உள்ளது.

சேப்பலுக்கு அடிபணிந்து விட்டதாகவே தெரிகிறது

9:58 PM  

Post a Comment

<< Home