Thursday, August 17, 2006

கைகொடுக்குமா SSC மைதானம்??

மிகவும் பரபரப்பான தொடராயிருக்கும் என எதிர்பார்த்த இலங்கை முத்தரப்பு தொடரை மழையும், குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் பாதித்து விட்டன. இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையிலேயான முதல் ஆட்டம் மழையால் தடைப்பட்டிருந்த சூழலில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடித்ததையடுத்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வீரர்களை நாடு திரும்ப அழைத்தது. மேலும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தொடரில் விளையாடக்கூடாது என்று தமிழ் புலிகள் என்ற இளைஞர் அமைப்பு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு குறித்த இலங்கை கிரிக்கெட் போர்டின் விளக்கம் திருப்தியளித்ததையடுத்து இந்தியா தொடரில் விளையாட தயக்கம் ஏதுமில்லை என்று அறிவித்த நிலையில் முத்தரப்பு தொடர் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடராக மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மழையினால் தேங்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்றும் வசதிக்காகவும் மூன்று ஆட்டங்களும் இலங்கை சிங்கள மைதானத்திலேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பு என்பதற்கு முன்னுரிமை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் கிடையாது. உள்நாட்டு மோதல்கள் மீண்டும் பழைய உச்சகட்ட நிலையை அடைந்து கொண்டிருக்கும் சூழலில் விளையாட்டு போட்டிகள் தேவையா என்ற கேள்வியும் எழாமலில்லை. அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவின் திடீர் விலகல் கொஞ்சம் அதிகப்படியான நடவடிக்கையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆசிய நாடுகளில் ஆடும் போது மற்ற நாடுகள் கொஞ்சம் அதிகப்படியான பந்தா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற சந்தேகம் வலுக்கிறது. இங்கிலாந்தில் குண்டுவெடிப்பு நடந்த பின்னரும் பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடி தொடரை நிறைவு செய்தது. உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையிலே தொடங்கிய டெஸ்ட் தொடரில் எந்த வித பாதுகாப்பு குறைபாடுமில்லாமல் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி குண்டுவெடிப்பையடுத்து ஒவர் ரியாக்ட் செய்திருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பு பிரச்சனை எனும்போது அதை இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேசி பாதுகாப்பை உறுதிப்படுத்த முயன்றிருக்கலாம். மாறாக இவ்வாறான அவசர நடவடிக்கையிலிறங்கி இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு அல்லாமல் மற்ற நாடுகளுக்கு தவறான தவறான சமிஞையையும் காட்டியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் போர்டு இந்த விவகாரத்தை பெருத்த நிதானத்துடன் சமாளித்திருக்கிறது ( இலங்கை கிரிக்கெட் போர்டின் ஆதரவு வேறு பல நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தேவைப்படுவதும் ஒரு காரணம் என்றாலும்)

நாளை மழை மட்டும் குறிக்கிடாமல் இருந்தால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாய் அமையும். இந்தியாவிற்கு எதிரான கடைசித்தொடரில் 6-0 6 - 1 என்ற ரீதியில் செம உதை வாங்கிய இலங்கை, கடைசியாக ஆடிய இங்கிலாந்து தொடரில் அபார வெற்றி பெற்றது. மாறாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்தியா பலம் குறைந்த மேற்கிந்திய தீவுகளிடம் 4 - 1 என்ற ரீதியில் உதைவாங்கியது. பழி வாங்க துடிக்கும் உள்நாட்டுப்புலி இலங்கை, மீண்டும் வெற்றியை தொடர் தொடர நினைக்கும் இந்தியா என போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும் SSC மைதானம் இந்தியாவுக்கு இதுவரை மிகவும் சாதகமாயிருந்து வந்திருக்கிறது. (4/7) ஆறு மாதம் கழித்து மீண்டும் தலைவர் களத்திலிறங்குகிறார். சச்சினுக்கும் இதுவரை இந்த மைதானம் ராசியாகவே இருந்து வந்திருக்கிறது.(5 ஆட்டங்களில் 203 ரன்கள் (40.60)) கைகொடுக்குமா SSC மைதானம்??

Cross Posted in http://vicky.in/dhandora

2 Comments:

Blogger பழூர் கார்த்தி said...

நன்றாக அலசியிருக்கிறீர்கள் விக்னேஷ், பாராட்டுக்கள் !!

***

// இலங்கை கிரிக்கெட் போர்டின் ஆதரவு வேறு பல நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தேவைப்படுவதும் ஒரு காரணம் என்றாலும் //

சரியான கணிப்பு.. உண்மைதான் இது..

***

// இந்தியாவிற்கு எதிரான கடைசித்தொடரில் 6 - 0 என்ற ரீதியில் செம உதை வாங்கிய இலங்கை //

6 - 1 என்ற கணக்கில் இலங்கை தோற்றது..

***

// வெற்றியை தொடர் //

வெற்றியை தொடர ??

***

லிட்டில் மாஸ்டர் டெண்டுல்கர் விளாசலை திரும்பவும் எதிர்பார்க்கலாம்...

10:00 PM  
Anonymous Anonymous said...

Thanks சோம்பேறி பையன்.

Now corrected the mistakes.

// லிட்டில் மாஸ்டர் டெண்டுல்கர் விளாசலை திரும்பவும் எதிர்பார்க்கலாம்...

me too.. But it seems rain will spoilsport the game

10:22 PM  

Post a Comment

<< Home