Monday, September 11, 2006

DLF கிரிக்கெட் தொடர் - முன்னோட்டம்

இந்தியா, ஆஸ்த்ரேலியா, மேற்கிந்திய தீவுகள் கலந்து கொள்ளும் கலக்கலான கிரிக்கெட் தொடர் நாளையிலிருந்து மலேசியாவில் ஆரம்பமாகிறது. அத்தொடருக்கான முன்னோட்டம் இது.


வழக்கம்போல நான் என்ன எழுதினாலும், படிச்சிட்டு ஆல்ட் f4 போட்டுட்டு போயிருவீங்க, ஒரு பின்னூட்டம் கூட இதுக்கும் வரப்போரதில்லைன்னு நல்லா தெரிஞ்சாலும், நம்ம கடமையை நம்மதான செஞ்சாகனும் !!


வழக்கமாக முன்னோட்டம் எதுவும் எழுதாத நான், இலங்கையில் நடக்கவிருந்த கிரிக்கெட் தொடருக்காக முன்னோட்டம் (இதே பதிவில்தான்)எழுதினேன். நான் எழுதிய ராசி, தொடரே நிறுத்தப் பட்டு விட்டது !

இப்போ இது எழுதலாம்னு நினைக்கறப்ப, க்ரிக் இன்போவுல போட்ருக்கான், கோலாலம்பூர்ல மழை பெய்ஞ்சுகிட்டு இருக்காம், விளங்கிரும் போங்க..


செப்டம்பர் 14, இந்தியாவுக்கு முதல் மேட்ச் வெஸ்ட் இண்டீஸ் கூட. யுவராஜ் இந்த ஆட்டத்தில விளையாட மாட்டாராம், ஜூரமாம் (fever). அவர் விளையாண்டா மட்டும் வின் பண்ணவா போறோம்ன்னு சொல்றீங்களா..

கென்யாகிட்டல்லாம் தோத்திக்கினு இருந்த வெஸ்ட் இண்டீஸ், போன சீரிஸ்ல இந்தியாவ 4-1 கணக்குல வின் பண்ணி, வேர்ல்ட் சாம்பியன் மாதிரி போஸ் கொடுத்திக்கினு இருக்கு. இர்பான் பதான், எந்த கவலையுமில்லாம ஒரு நாளைக்கு ஒன்னு கணக்குல டூத்பேஸ்ட் விளம்பரம் நடிச்சிக்கினு கீறார்.


எது எப்படியோ, சீரிஸ் ஆரம்பிச்சா, ப்ரண்ட்ஸ்கிட்ட பெட் கட்டி விளையாடலாம், ஏதோ கொஞ்சம் காசு பாக்கலாம்...


கடசி கடசியா, ஒரு மேட்டர கேட்டுக்கினு கிளம்புங்க, இந்தியா ஐசிசி ரேங்கிங்ல, டெஸ்ட்டுல 4 வது இடம், ஒன் டேயில 3 வது இடத்தில இருக்காம். இந்த சீரிஸ்ல வாங்கபோற அடில, ஒன் டே இடம் கடசிக்கு இஸ்துக்கினு பூடும்னு நினைக்கிறன், நீங்க இன்னா நினைக்கறீங்க ???


***

9 Comments:

Blogger இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா! :)

விளையாடட்டும். ஆரம்பத்திலேயே இவ்வளவு அவநம்பிக்கையா?

word verificationஐ எடுமய்யா. அது வரை நம்ம மக்கள்ஸ் வர மாட்டாங்க. எல்லாம் சோம்பேறிப் பசங்க. ;)

8:15 AM  
Blogger பழூர் கார்த்தி said...

word verification option is removed...

11:03 AM  
Blogger சும்மா அதிருதுல said...

/./
வழக்கம்போல நான் என்ன எழுதினாலும், படிச்சிட்டு ஆல்ட் f4 போட்டுட்டு போயிருவீங்க, ஒரு பின்னூட்டம் கூட இதுக்கும் வரப்போரதில்லைன்னு நல்லா தெரிஞ்சாலும், நம்ம கடமையை நம்மதான செஞ்சாகனும் !!
/./

+....:)

11:19 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

மிக்க நன்றி சோ.பை. அவர்களே! :D

11:40 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

மிக்க நன்றி சோ.பை. அவர்களே! :D

11:40 AM  
Blogger பழூர் கார்த்தி said...

வைசா,
//இந்தியா அப்படி ஒன்றும் மோசமாக விளையாடப் போவதில்லை.//

அப்படியே எதிர்பார்ப்போம், இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

***

இலவச கொத்தனார்,
//word verificationஐ எடுமய்யா. அது வரை நம்ம மக்கள்ஸ் வர மாட்டாங்க. //

நேற்றே எடுத்து விட்டேன், ஆலோசனைக்கு மிக்க நன்றி !

//எல்லாம் சோம்பேறிப் பசங்க. ;) //
என்ன உள்குத்தா :-)))))

***

சின்னபுள்ள,
ஏதோ புரிஞ்சுகிட்டா சரி :-))))

***

இலவச கொத்தனார்,

நன்றிக்கு, நன்றி !!
இப்ப இதுக்கும் ஒரு நன்றி சொல்வீங்களா :-))))

9:52 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//நன்றிக்கு, நன்றி !!
இப்ப இதுக்கும் ஒரு நன்றி சொல்வீங்களா :-))))//

சொல்லிட்டா போச்சு. அதுல ஒரு குறை வைப்பானேன்..

நன்றிக்கு நன்றிக்கு நன்றி. :)

10:14 PM  
Blogger கார்த்திக் பிரபு said...

thagavalgalukku nanri somberi paiyan

eludhunga padikka nanga irukom..aduthavangalai thaakki mattum eludhaathinga

comments niraya varalam..but unga mela ulla madhipi poidum

11:36 PM  
Anonymous Anonymous said...

கண்மணி...

நீ ஆசையோடு கேட்டதால் உனக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது...நீ அடுத்து இடப்போகும் எந்த பதிவாக இருந்தாலும் அதை 100 அடிக்க வைத்து உன்னை முதல் செஞ்சுரி அடிக்க வைக்க அ.மு.க. முடிவு செய்துள்ளது...

கலங்க வேண்டாம், காலம் வரும், காத்திரு...

பொதுச்செயலாளர்,
அனானி முன்னேற்ற சங்கம்,
அல்சூர், பெங்களூரூ..

12:31 AM  

Post a Comment

<< Home