Friday, December 02, 2005

அமீரகத்தில் கிரிக்கெட்

அமீரகத்தில் வசிப்பவர்களில் கணிசமான பகுதியினர் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அமீரகத்திலும் கிரிக்கெட் மிகப் பிரபல்மான விளையாட்டாக இன்னமும் கோலோச்சுகிறது.
சார்ஜா மிக முக்கியமான ஒரு ஆடுகளமாக கிரிக்கெட் 'மேட்ச் ஃபிக்ஸிங்' விவகாரம் வெளியில் த்லையெடுக்கும்வரை இருந்து வந்தது. அதன் பின்னர் நிகழ்ந்த குழப்பங்களுக்குப் பிறகு இன்னமும் சார்ஜா முழு பலத்தோடு திரும்பி வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

எனவே சார்ஜா விட்ட இடத்தைப் பிடிப்பதில் துபாயும் அபுதாபியும் ஆர்வம் காட்டத் துவங்கின. அபுதாபியில் பெரிய அள்வில் கிரிக்கெட்டுக்கான மைதான்ம் கட்டப்பட்டது. துபாயில் அது இல்லை. எனவே அபுதாபி தனது
கட்டுப்பாட்டுக்குள் கிர்க்கெட் ஆட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்து திடீரென இந்தியா - பாகிஸ்தான் ஒருநாள் போட்டியைத் துவக்குவதாக அறிவித்தது. தடாலடியாக இந்த அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்ததும் 'சாயம் வெளுத்து' விட்டது. இன்று வரை என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.

இதற்கிடையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது தலைமையகத்தை துபாய்க்கு மாற்றிக் கொண்டதால் துபாய் ஒரு சர்வதேச கிரிக்கெட் மையமாக மாறும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என்றாலும் முன்பே சொன்னது போல கிரிக்கெட் ஆடுவதற்கு துபாயில் சரியான மைதானம் கூட இல்லாத நிலை. போதாக்குறைக்கு துபாய் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்ட இடத்தை உடனே காலி செய்யுமாறு துபாய் நகராட்சி கேட்டிருப்பது 'பட்ட காலிலேயே படும்' என்பதை மீண்டும் நிரூபிப்பது போல அமைந்திருக்கிறது.

சார்ஜா மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்புமா அல்லது அபுதாபி அமீரகத்தின் கிரிக்கெட் மையமாக மாறுமா அல்லது துபாய் அந்த அந்தஸ்தைப் பெறுமா என்பது மட்டும் இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. என்றாலும் அமீரகத்தில் கிரிக்கெட் வளர்ச்சி என்பது தவிர்க்கமுடியாததாகவே தோன்றுகிறது

0 Comments:

Post a Comment

<< Home