Friday, December 02, 2005

சாதனை புரிவாரா சச்சின்?

சென்னை சேப்பாக்கம் மைதானம் சச்சினை பொறுத்தவரை ஒரு Happy hunting groundஎன சொல்லலாம்.

இதுவரை இம்மைதானத்தில் அவர் பங்குபெற்ற ஆறு டெஸ்ட் பந்தயங்களில் நான்கு செஞ்சுரிகள் எடுத்து - சராசரி 102 ரன்கள் - இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். ஆகவே இம்மைதானம் சச்சின் தனது 35வது சதத்தை அடித்து உலக சாதனையையும் நிகழ்த்த இம்முறை உதவும் என்று நம்புவோம்.

பாஸ் புயலின் பயமுறுத்தனலினால் வெள்ளி, சனி நாட்களில் ஆட்டம் தடைபட்டாலும் எஞ்சியுள்ள மூன்று நாட்கள் ஆட்டம் தடைபடாமல் நடந்தாலே போதும் என்று நினைக்கிறேன். சேப்பாக்கம் ஆடுதளம் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இதுவரை இருந்து வந்துள்ளது என்ற சரித்திர சான்றுகளைப் பார்க்கும்போது ஆட்டம் மூன்று நாட்களுக்குள்ளேயே வெற்றி/தோல்வியை அறிந்துகொள்ள முடியும் என்று நம்பலாம்.

சச்சினுக்கு மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் சேப்பாக்கம் ஒரு ராசியான மைதானமாகவே இதுவரை இருந்து வந்துள்ளது! ஆகவே மூன்று நாள் முழுவதுமாக மழையில்லாமல் இருந்தால் போதும். வெற்றி கிட்டுவது உறுதி!

இன்றைய டெஸ்ட் போட்டியை குறித்து இன்றைய தினமலர் வெளியிட்ட பிரத்தியேக பக்கத்தை இத்துடன் இனணத்துள்ளேன்:
சச்சின்

1 Comments:

Blogger அன்பு said...

கிரிக்கெட் போலவே பரபரப்பா அடிக்கடி பதிவிட்டு குழு நண்பர்கள் அனைவரும் அசத்துகின்றீர்கள். இது எந்நாளும் தொடர வாழ்த்துக்கள்.

3:04 AM  

Post a Comment

<< Home