கங்குலி மேளா!
கங்குலி விவகாரம் கேலிக்குரிய விஷயமாகி வருகிறது.
மேற்கு வங்கத்தினருக்கு இது ஒரு தன்மான விஷயமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. விளையாட்டு போட்டிகளை வெறும் விளையாட்டு போட்டிகளாக மட்டுமே காண்கின்ற மனப்பக்குவம் இல்லாதவர்கள் அவர்கள். நான் சிறிது காலமே கொல்கொத்தாவில் பணியாற்றியிருந்தாலும் மோஹன் பகானுக்கும், மொஹம்மதன் ஸ்போர்ட்டிங்குக்கும் அல்லது முந்தைய கால்பந்தாட்ட அணிகளில் ஒன்றுக்கும் ஈஸ்ட் பெங்கால் கால்பந்தாட்ட அணிக்கும் நடக்கும் போட்டி தினங்களில் கொல்கொத்தா நகரமே போர்க்கோலம் கொண்டு காணப்படுவதைக் கண்டிருக்கிறேன். அதில் யார் வெற்றி பெற்றாலும் தோற்றவர் அணி கலவரத்தில் ஈடுபட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்தே ஸ்தம்பித்து போய்விடும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய காவல்துறையினரும் இப்போட்டிகளில் உணர்ச்சிபூர்வமாக பங்குகொண்டிருப்பவர்களாகவே இருந்ததால் அவர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பார்கள்.
கொல்கொத்தா இளவரசர் என்றும் தாதா என்றும் செல்லப்பெயர் வைத்து அழைக்கப்பட்டுவரும் கஙகுலி விஷயத்தில் மேற்கு வங்கத்தினரின் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு ஒரு அதிசயமே இல்லை. ஆனால் இதுவரை அது சாதாரண அடிமட்ட கிரிக்கெட் விசிறிகளிடம் மட்டுமே இருந்துவந்த விஷயம். இப்போது மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்கள் தலையிட்டு பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுகிற அளவுக்கு போனது பைத்தியக்காரத்தனமாகவே தோன்றுகிறது.
மேற்கு வங்க முதல்வர் புத்தாதேப் ஒரு படி மேலே போய் கங்குலியின் வெளியேற்றம் 'நமக்கெல்லாம் ஒரு அவமானம்'என்பதுபோல் பேசுகிறார்!
இதில் வேடிக்கையென்னவென்றால் கங்குலியும் BCCI முன்னாள் தலைவர் டால்மியாவும் இதைப்பற்றி கலந்து ஆலோசித்தப்பிறகு டால்மியா BCCI தலைவர் பவாரை அழைத்து இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் தலையிடக்கூடாது என்கிறாராம்!
ரசிகர்களையும் அரசியல்வாதிகளையும் விட்டுவிடுவோம். அவர்கள் எதிலுமே உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால் கங்குலி! அவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை. இத்தனைக்கும் பிறகு அவர் அணியில் சேர்க்கப்படுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவருக்கு அணியிலுள்ள மற்ற வீரர்களின் முழுமையான வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறாரா? அல்லது இனியும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து ஆடவேண்டும் என்றுதான் நினைக்கிறாரா? இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக மேற்கு வங்காள அணியின் தலைவர் பதவியிலிருந்து தானாக முன்வந்து இறங்கியவர் ஏன் அதே கொள்கையை யுவராஜ் மற்றும் கேய்ஃபுக்காகவும் கடைப்பிடிக்கக் கூடாது?
கங்குலிக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் சாதித்ததை ரசிகர்கள் மதித்து உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நடந்ததை ஏற்றுக்கொண்டு மதிப்புடன் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள்.
அதுதான் உங்களுக்கு நல்லது. அதை விட்டு விட்டு இந்த விஷயத்தை இனியும் பெரிதுபடுத்தி கேலிக்கு ஆளாகாதீர்கள்.

5 Comments:
கங்குலி,டென்டுல்கர் ஒரு வயது தான் வித்தியாசம் தான். டென்டுல்கர் ஒய்வு பெற சொல்ல முடியும் என்றால் கங்குலியும் ஓய்வு பெறுவார்.
டென்டுல்கர் தென்னாப்பிரிக்கா ஒரு நால் போட்டி ரன்கல்(2,2,2,23something).
ஒரு திறமையான் கேப்டன் மற்றும் வீரரை இப்படி பதிவு போட்டு கேவலப் படுத்த வேண்டாம்
தமிழக சட்டசபயில் ஜெயலலிதாவுக்கு சவுரி முடியா, ஒரிஜினலா அப்படினு எல்லாம் நேரத்த ஓட்டுறாங்க. அப்படி இருக்கும் போது கங்குலி பிரச்சனை விவதிக்கப் படுவது தவறு இல்லை. ஏனென்றால் செலக்சனில் அரசியல் தலையீடு உள்ளது தெளிவாக தெரிகிறது
இதென்னமோ தினமும் சோக்கடிப்பதை வேலையை வைத்திருக்கிறீர்கள். கேட்டால் விவாததிற்கு வரமாட்டேன் நீண்டுறும் சொல்றது. டெண்டுல்கர் அணியில் இருந்து நீக்கியிருந்தால் இந்த விளைவு ஏற்பட்டிருக்காதா, இங்கே மும்பையே கொதிதெழுந்திருக்கும்.
கொல்கத்தா பொங்கியதில் தவறில்லை, நீங்க எழுதினதும் தப்புன்னு சொல்லமாட்டேன் தமிழனோட மனப்பான்மையைத்தான் நீங்க காட்டியிருந்தீங்க. நாம கொஞ்சம் நாகரீகமாய்ட்டோம் அதான் நம்ம வீரர்கள் இல்லாவிட்டாலும் வாயைமூடிக்கொண்டிருக்கிறோம். திறமையான வீரர்கள் இருந்தும்.
ஒன்னே ஒன்னுதான் நான் சொல்லவிரும்புவது, இந்தியா ஆஸ்திரேலியா கிடையாது அப்படியிருந்தால் இன்று டிராவிட் விளையாடிக்கொண்டிருக்கவோ இல்லை அகார்கர் பந்துவீசிக்கொண்டிருக்கவோ மாட்டார்கள்.
இந்தியா இந்தியாதான் ஒரேயடியாக இந்தியாவை ஆஸ்திரேலியாவாக மாற்ற நினைப்பது மடமை மட்டுமே.
இதென்னமோ தினமும் சோக்கடிப்பதை வேலையை வைத்திருக்கிறீர்கள். //
இந்தியா இந்தியாதான் ஒரேயடியாக இந்தியாவை ஆஸ்திரேலியாவாக மாற்ற நினைப்பது மடமை மட்டுமே. //
மோகன்தாஸ் ஜோக்கடிப்பது நானல்ல. நீங்கள்தான்.
கங்குலியின் பொற்காலம் முடிந்துபோன விஷயம். அதை புதுப்பிக்க நினைப்பது முட்டாள்தனம். டெnடுல்கரைப் போல அவரை வெறும் மட்டையாளராக மட்டும் வேண்டுமானால் இனியும் சிறிது காலம் அணியில் வைத்திருக்கலாம். ஆனால் அவருடைய குணம்தான் அணியில் உள்ள மற்ற வீரர்களை அவரிடமிருந்து தள்ளி வைத்திருக்கிறது. பயிற்சியாளருடனான விவாதங்களை வெளியில் கொண்டுவந்ததன் மூலம் டென்டுல்கர், டிராவிட் போன்ற எளிதில் உணர்ச்சிவசப்படாத வீரர்களையும் அவரை விட்டு விலக செய்துவிட்டார். ஹர்பஜனுக்கு முன்னுரிமை கொடுத்து கும்ப்ளேயை ஒதுக்கியவரும் அவர்தான் நல்ல ஃபார்மில் இருந்தபோது லக்ஸ்மணை ஒரு நாள் ஆட்டங்களிலிருந்து விலக்கிவைக்க காரணமாயிருந்தவரும் அவர்தான். டால்மியா கொடுத்த ஆதரவைப் பயன்படுத்திக்கொண்டு அணியில் முன்னாள் பயிற்சியாளரையும் மதிக்காமல் எதேச்சாதிகாரம் செய்து வந்தவரும் அவர்தான். நீங்கள் கங்குலியின் டைஹார்ட் விசிறியாயிருக்கலாம். ஆனால் அதை எல்லோரும் ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை. கங்குலியைப் பற்றி அவருடன் ஒரு வருடம்கூட சேர்ந்து விளையாட இங்கிலாந்து வீரரே அவரைப் பற்றி Lord Snooty என்று வர்ணித்திருக்கிறார். மேலும் கடந்த முறை சென்னையில் ஆஸியுடனான டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் வாக் Toss செய்ய மைதானத்துக்கு வந்து இவருக்காக பத்து நிமிடத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிவந்ததை அவர் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டு டெஸ்ட் போட்டி சரித்திரத்தில் கடைப்பிடித்து வந்த சாதாரண நாகரீகத்தையும் கங்குலி மீற்விட்டார் என்று வேதனையடைந்திருந்தார். கங்குலியின் கவர் டிரைவ் கிரிக்கெட் உலகத்திலேயே அழகானதாயிருக்கலாம். ஆனால் மேற்கு வங்கத்தினரின் பிரத்தியேக குணமான யாரிடமும் ஒத்துப்போகாத குணம் அவரிடம் நிறையவே இருக்கிறது. அதுதான் இன்றைய அணியிலுள்ளவர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்திருப்பதற்கு காரணம். அவர் அணியில் மீண்டும் தொடர்ந்து இருந்தால் Dressing Room ஒரு மயானமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.
கங்குலி,டென்டுல்கர் ஒரு வயது தான் வித்தியாசம் தான்.//
கங்குலியையும் டென்டுல்கரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் என்ன சொல்ல. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான். திறமை ஒரு பக்கம் இருக்கட்டும், அணியிலுள்ள மற்ற வீரர்களுடன் பழகுவதில் டென்டுல்கர் சொக்க தங்கமென்றால் கங்குலி இளிக்கும் பித்தளை. அணியின் தலைவராய் மட்டுமே கங்குலியால் இனி இந்திய அணியில் விளையாடமுடியும். ரன் எடுக்காவிட்டாலும், காட்ச் கோட்டை விட்டாலும், மோசமாக பீல்டிங் செய்தாலும் அணியில் தொடர்ந்து இடம் வகிக்கக் கூடியவர் தலைவர் மட்டுமே. அதுதான் கங்குலி.
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய காலம் முடிந்துவிட்டது. Dead and Gone. Whether you all like it or not. Whether they discuss in Parliament or in UN.
//கங்குலியின் பொற்காலம் முடிந்துபோன விஷயம். அதை புதுப்பிக்க நினைப்பது முட்டாள்தனம். //
இதையார் சொல்றது நீங்களா? நானா? இல்லை BCCI ஆ? போங்கசார். பொற்காலம் கற்காலம்ன்னுக்கிட்டு.
இந்திய கிரிக்கெட்டில் பாலிடிக்ஸ் பண்ணது கேப்டன் கங்குலி இல்ல, அது போர்டு. நல்லா தெரிஞ்சிக்கோங்க. இன்னிக்கு கங்குலியை தூக்கினதுக்கு காரணம் டிராவிட்னு சொன்னா அது எப்படி முட்டாள்தனமோ அதைப்போலத்தான் இதுவும். கங்குலியின் பிரச்சனைகள் பற்றி சொல்லிட்டீங்க, அவரிடம் இருக்கும் கேப்டனுக்குரிய நல்ல குணங்கள் உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யமே. என்ன இருந்தாலும் அவர் இந்திய கிரிக்கெட்வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன் இல்லையா இப்படித்தான் சொல்வீங்க :-).
முக்கியமா ஒரு விஷயம் நான் கங்குலியின் டைஹார்ட் விசிறியெல்லாம் கிடையாது. ஆனால் இப்ப நடக்குறது சரியில்லை நிச்சயமா. சொல்லப்போனால் கிரிக்கெட் மீதிறுந்த கிரேஸ் இப்ப சுத்தமாயில்லை அதனாலத்தான் கொஞ்சமாவது விலகியிருந்து பார்க்கமுடியுது.
உலகத்தில எங்கயுமே நடக்காதத பண்ணிட்ட மாதிரியில்ல சொல்லீட்டீங்க இதை டெண்டுல்கர் பண்ணலையா, கவாஸ்கர் பண்ணலையா. நல்லா ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோங்க இதெல்லாம் இந்திய கிரிக்கெட்டில் கிடைக்கும் பணம், பண்ணுகிற வேலை இதில் கங்குலியை குத்தம் சொல்றது மடத்தனம்.
Post a Comment
<< Home