நாடாளுமன்றத்தில் கங்குலி பற்றிய விவாதம்
இந்தியாவில் எத்தனையோ கடுமையான பிரச்னைகள் இருக்கையில் சோம்நாத் சாட்டர்ஜி - அவைத்தலைவர் - கங்குலி இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஏன் நீக்கப்பட்டார் என்று நாடாளுமன்றத்தில் விவாதிப்போம் என்று சொல்லியுள்ளார். அபத்தம்!
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி, பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் சத்தம் போடுவதில் பொருள் இருக்கிறது. இப்பொழுது வங்காளிகள் அனைவரும் கங்குலியின் பக்கம். மேற்கு வங்கத்தில் அடுத்து மாநிலத் தேர்தல் வரப்போகிறது. ஆனால் இதுதான் சாக்கு என்று இதுபோன்ற எதற்கும் உதவாத விஷயங்களை மக்களவைத் தலைவர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் போவதாகச் சொல்வது பைத்தியக்காரத்தனம்.
மக்களவையில் ஷரத் பவார் விவசாயத்துறை அமைச்சராக உட்கார்ந்திருப்பார். ஆனால் அவரிடம் பிசிசிஐ பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். அதற்கு அவரும், எனக்குத் தெரியாது, விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேளுங்கள் என்று கூடச் சொல்லலாம்! ஏற்கெனவே 'கேள்விக்குப் பணம் ஊழல்', 'எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு' என்று மானம் போயிருக்கும் அவைக்கு இப்பொழுது கங்குலி பற்றிய விவாதம் மணிமகுடமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

1 Comments:
பத்ரி,
இதற்கு முன்பாகவே இத்தகைய கூத்துக்கள் அரங்கேறியுள்ளன.
1986 ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்த போது ஒருநாள் போட்டிகளுக்க்கான அணியிலிருந்து கவாஸ்கரை நீக்கினார்கள்.
அப்போதி அதைப் பற்றி பார்லிமெண்டில் விவாதித்தார்கள்.
ராஜ்குமார்
Post a Comment
<< Home