பாகிஸ்தான் அபார வெற்றி
இன்று காலை காலிங்வுட்டும் பெல்லும் விளையாடியதைப் பார்த்தால் இங்கிலாந்து டிரா செய்துவிடும் என்று தோன்றியது. உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட்டும் விழவில்லை. ஆனால்... தின்று முடித்து வந்ததும் இங்கிலாந்து மட்டையாளர்களுக்குத் தூக்கம் வந்துவிட்டது போலும். சடசடவென விக்கெட்டுகள் விழுந்தன. 205/2 என்ற நிலையிலிருந்து 212/6 என்று அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகள் விழுந்தன. அதில் காலிங்வுட், பெல் தவிர பியட்டர்சன், ஃபிளிண்டாஃப் இருவரும் அடக்கம். அவ்வளவுதான்.
அடுத்து மிச்சம் இருந்தவர்கள் கொஞ்சம் தாக்குப் பிடித்தனர். ஆனால் ஒருவர் பின் ஒருவராக விழுந்த வண்ணம் இருந்தனர். 248 ஆல் அவுட். பாகிஸ்தான் ஓர் இன்னிங்ஸ் + 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஷோயப் அக்தருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், தனீஷ் கனேரியாவுக்கு 4 விக்கெட்டுகள்.
இரண்டாவது டெஸ்டையே இங்கிலாந்து தடுமாறித்தான் டிரா செய்தனர். இந்தத் தொடர் மொசமாக 0-3 என்று ஆகியிருந்திருக்கலாம். ஆஷஸ் வெற்றிக்குப் பின்னர் இங்கிலாந்திடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்தத் தோல்விக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.
அடுத்து இந்தியா விளையாடப்போவது இந்த இருவருடனும்தான். இந்த இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்கிறது - 3 டெஸ்ட்கள், 5 ஒருநாள் போட்டிகள் விளையாட. அதற்குப் பிறகு இங்கிலாந்து இந்தியாவுக்கு வருகிறது - 3 டெஸ்ட்கள், 7 ஒருநாள் போட்டிகள்.

1 Comments:
தொடரை வென்ற பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுகள்.
நம்பிய வீரர்கள் கை கொடுத்தார்கள், கூட்டு முயற்சி, அணித்தலைவரின் திறமை போன்றவற்றால் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவை வென்ற தலை கனத்தால் இப்போ இங்கிலாந்து தலை குனிய வேண்டியதாகி விட்டது.
இந்திய துணைக்கண்டத்தில் வெற்றி பெறுவது ஒன்றும் சாதாரண விசயம் இல்லை என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்.
Post a Comment
<< Home